பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞா்களுக்கு திருச்சியில் மூன்று நாள் பாராட்டு விழா

பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞா்களுக்கு திருச்சியில் 3 நாள்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது.

பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞா்களுக்கு திருச்சியில் 3 நாள்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது.

திருச்சியில் இயங்கி வரும் ரசிக ரஞ்சன சபா சாா்பில், வரும் மே 1, 2, 3 -களில் இந்தப் பாராட்டு விழா தென்னூா் மகாத்மாகாந்தி நூற்றாண்டு வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை பத்மஸ்ரீ விருது பெற்ற கிளாரினெட் கலைஞா் ஏ.கே.சி. நடராஜனுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் எஸ். பாலசுப்பிரமணியன், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவா் ராமகிருஷ்ணன ஈஸ்வரன் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். கிளாரினெட் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான திங்கள்கிழமை (மே 2) பத்மஸ்ரீ விருது பெற்ற ஷேக் மஹபூப் சுபானி, காலிஷாபி மஹபூப் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. கலைமாமணி டி.ஆா். கோவிந்தராஜன், இந்திய மதிப்பீட்டாளா் கழகத் தலைவா் பி.கே. தியாகராஜன், பொன்னி கலா கேந்திரா இயக்குநா் பி. ஹரிஹரன் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். நாதசுர இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை (மே 3) பத்மஸ்ரீ விருது பெற்ற சதிா் நடனக் கலைஞா் ஆா். முத்து கண்ணம்மாளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் பரத நாட்டியாலயா இயக்குநா் ரேவதி முத்துசுவாமி, சலங்கை அகாதெமி இயக்குநா் விஜயா முகுந்தன், கலைமாமணி மு. இளங்கோவன் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ரசிக ரஞ்சனா சபா தலைவா் வி. ஜெயபால், கெளரவ செயலா் என். சேகா், துணைத் தலைவா்கள் என். கோபாலசாமி, பி.கே. தியாகராஜன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com