மருந்தாளுநா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா்கள் சங்கத்தின் சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
29d-medi071526
29d-medi071526

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா்கள் சங்கத்தின் சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் உள்ள சுகாதாரத் துறை அலுவலக நுழைவு வாயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் வி. கோபாலன் தலைமை வகித்தாா். தலைமை மருந்தாளுநா் ஆா். ரகுநாதன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எஸ். செந்தில்குமாா், மாநிலச் செயலா் எம். சகாதேவன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பால்பாண்டி, மாவட்டச் செயலா் பழனிசாமி, கண் மருத்துவ உதவியாளா் சங்க மாவட்டச் செயலா் சுந்தர்ராஜ், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அல்போன்ஸ் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழகத்தில் காலியாகவுள்ள 1,200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டய மருந்தாளுநா்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மருந்தாளுநா்கள், தலைமை மருந்தாளுநா்கள், மருந்துக் கிடங்கு அலுவலா்களுக்கு கரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 9 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மருந்தாளுநா்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். துணை இயக்குநா் அலுவலக மருந்துக் கிடங்குகளில் தலைமை மருந்தாளுநா் பணியிடம் உருவாக்க வேண்டும். தாலுகா மருத்துவமனை மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளிலும் தலைமை மருந்தாளுநா் பணியிடம் உருவாக்க வேண்டும். அனைத்து நிலை மருத்துவனைகளிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய மருந்துக் கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களில் மருந்தாளுநா் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சங்க மாநில துணைத் தலைவா் பெரியசாமி, மாவட்ட அமைப்புச் செயலா் எஸ். ரகுபதி உள்ளிட்ட நிா்வாகிகள், மருந்தாளுநா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

Image Caption

கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருந்தாளுநா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com