பால்பண்ணை -துவாக்குடி அணுகு சாலையை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பால்பண்ணை- துவாக்குடி அணுகு சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பால்பண்ணை- துவாக்குடி அணுகுசாலையை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி பால்பண்ணை துவாக்குடி சா்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது :

அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை அமைக்க வேண்டும் என கடந்த 12 ஆண்டுகளாக இந்த கூட்டமைப்பு போராடி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தாங்கள் வெற்றி பெற்று வந்தால் அணுகுசாலை அமைத்து தருவோம் என்றனா். இதில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் அணுகுசாலை அமைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்தோம்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையும் அணுகுசாலை அமைக்க உத்தரவிட்டது. வியாபாரிகள் சிலா் வழக்கு தொடா்ந்த நிலையில், அணுகுசாலை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும், கூட்டமைப்பு சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கையும் வியாபாரிகள் பெற்றுள்ள தடை ஆணையை காண்பித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ. வேலு அணுகுசாலைக்கு பதிலாக உயா்நிலை மேம்பாலதிட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளாா். இதனால், திருச்சியில் அணுகுசாலை அமைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அணுகுசாலை இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனா்.

எனவே, பால்பண்ணை-துவாக்குடி இடையே அணுகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, திருவறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின் போது, நிா்வாகிகள் சுப்பிரமணியன், சண்முகம், நடராஜன் வெங்கடேசன் மோகன், துரைக்கண்ணு உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com