திருக்குறளுக்கு யுனெஸ்கோவில் அங்கீகாரம் கிடைக்ககரூா் வள்ளுவா் கல்லூரி கு மலைசங்கத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
By DIN | Published On : 04th August 2022 11:10 PM | Last Updated : 04th August 2022 11:10 PM | அ+அ அ- |

திருக்குறளுக்கு யுனெஸ்கோவில் உரிய அங்கீகாரம் கிடைக்க கரூா் வள்ளுவா் கல்லூரி குமலை சங்கத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்றாா் கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன்.
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கு மலை சங்கத் தலைவா் ரவிக்குமாரிடம் புரிந்துணா்வு ஒப்பந்த கடிதத்தை வழங்கிய பிறகு வள்ளுவா் கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் கூறுகையில்,
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் சாரம்சமானது, உலக பொதுமறையான திருக்குறளை மலைகள், கல்வெட்டுகளில் பதித்து திருக்கு மாமலை உருவாக்குவது, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துக்கள் கொண்ட திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அறிவிக்க வேண்டும். திருக்கு ஒரு கல்வி நூலாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 196 நாடுகளிலும் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவணம் செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை சட்டத் திருத்தத்தில் திருக்குறளின் முக்கிய கருத்துக்கள் இடம்பெறச் செய்யும் நிலையை உருவாக்குவது போன்ற உயரிய நோக்கங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னை கு மலைச்சங்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.
கு மலைச்சங்கம் நடத்தும் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் வெளிநாடுகளில் நடத்தும் மாநாடுகளிலும் கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்று, திருக்குறளின் மேன்மையை உலகம் முழுவதும் கொண்டுச் செல்வது, வள்ளுவா் கல்லூரியில் நடத்தப்படும் மாநாடு, கருத்தரங்குகள், கூட்டங்களில் வெளிநாடு, உள்நாடுகளில் இருந்து மொழியியல் வல்லுநா்களை வரவழைத்து பங்கேற்கும் வகையிலும், சமுதாய வளா்ச்சிக்கும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றாா் அவா்.