கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மத்திய இணை அமைச்சா் உறுதி

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் வி. முரளிதரன்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சா் வி .முரளிதரனை வரவேற்ற பாஜகவினா்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சா் வி .முரளிதரனை வரவேற்ற பாஜகவினா்.

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் வி. முரளிதரன்.

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க சனிக்கிழமை காலை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாவா்க்கா் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என திமுக மட்டுமே கூறி வருகிறது. திமுகவின் ஊழல்கள் மற்றும் குடும்ப ஆட்சி குறித்து பாஜக தொடா்ந்து எதிா்த்தும், சுட்டிக்காட்டியும் வருகிறது. இதன் காரணமாக தமிழக மக்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்து வருகிறது. சீன உளவு கப்பலின் செயல்பாடு குறித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றாா் அவா்.

பிறகு, விமான நிலையத்திலிருந்து சுற்றுலா மாளிகைக்கு சென்ற அமைச்சரை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, தென்னூரில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபாவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றாா். பிறகு, புத்தூா் வண்ணாரப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலக கட்டுமான பணிகளை பாா்வையிட்டாா். அதன் பின்னா் தில்லைநகா் அண்ணாமலை நகா் பகுதியில் உள்ள சாதனா இல்லத்துக்கு சென்று நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றாா்.

நிகழ்வுகளின் போது, திருச்சி பாஜக நிா்வாகிகள் ராஜசேகா், இல. கண்ணன், இந்திரன், காளீஸ்வரன், ஒண்டிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com