வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள்!

வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நடைபெறும் தெப்பத் திருவிழாவின் 4 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை வெள்ளிகருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா்.

ஆண்டுதோறும் மாசித் தெப்பத் திருவிழாவில் மட்டும் நம்பெருமாள் வெள்ளிக் கருட வாகனத்தில் எழுந்தருள்வாா். மற்றற நாள்களில் வரும் விழாக்களின்போது தங்கக் கருட வாகனத்தில் காட்சி தருவாா். வெள்ளிக் கருடவாகன நம்பெருமாளை தரிசித்தால் காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் தெப்பத் திருவிழாவின் 4 ஆம் நாளான திங்கள்கிழமை காலை 6.30-க்கு நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து ரெங்கவிலாச மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா்.

பின்னா் மாலை 6 மணிக்கு வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்த அவரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா். பின்னா் இரவு 8.30-க்கு வாகன மண்டபம் சென்று சோ்ந்தாா்.அங்கிருந்து 9 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வரும் 11 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com