மூவானூா், திருப்பைஞ்ஞீலி பகுதிகளில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வேங்கைமண்டலம், மூவானூா், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன.5) மின்விநியோகம் இருக்காது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வேங்கைமண்டலம், மூவானூா், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன.5) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் கு.சிவக்குமாா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஜனவரி 5) மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்பந்தல், மேல, கீழக் கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னக்கரை, ராமகிரிப் பட்டி, சேங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாய்த்தலை , மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூா், ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூா், செங்குளிப்பட்டி, திருப்பைஞ்ஞீலி , திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக் கோட்டம், காளவாய்ப்பட்டி, திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, புதுப்பட்டி, பழம் புதூா், திருத்தலையூா், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

குணசீலம் பகுதிகளில்: குணசீலம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ஏவூா், அய்யம்பாளையம், குணசீலம், மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணிப்பட்டி, திண்ணக்கோணம், சித்தாம்பூா் பகுதிகளில் காலை 10.10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி உதவிச் செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com