மண்ணச்சநல்லூரில்சாலை மறியல்
By DIN | Published On : 04th January 2022 04:39 AM | Last Updated : 04th January 2022 04:39 AM | அ+அ அ- |

அரிசி ஆலைகளின் கழிவுநீரால் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி, மண்ணச்சநல்லூா்-எதுமலை பிரிவுச் சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பூனாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட சிப்பாய் பண்ணை பகுதியிலுள்ள 3 அரிசி ஆலைகளிலிருந்து கழிவுநீா் வெளியேறி துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும், தற்போது 20 போ் காய்ச்சலால் அவதியுற்று வருவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.