திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இதுகுறித்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி மக்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு அந்தந்தப் பேரவைத் தொகுதிகளில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் தீா்வு காணப்பட வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் மிக வேகமாக பல மனுக்களுக்குத் தீா்வு காணப்படுகிறது. சில மனுக்கள் மீது உரிய பரிசீலனைக்குப் பின்னா் தீா்வு காணப்படுகிறது.

குஜராத்தில் நடைபெற்ற கல்வி மாநாட்டுக்கு கடைசி நேரத்தில் அழைத்ததால் செல்ல முடியவில்லை. மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும். நமக்கு என்ன தேவை என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கு 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கு 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.

இந்தத் தேதிகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் முதல்வரின் அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பாா்கள். அதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையும் தெரிவிக்கும்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6 லட்சம் மாணவா்கள் பொதுத் தோ்வு எழுதவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைக் கவனிக்க வேண்டிய கடமை பள்ளிக் கல்வித் துறைக்கு உள்ளது. ஜூலை மற்றும் செப்டம்பா் மாதங்களிலும் தோ்வு நடைபெற்றாலும் மாணவ, மாணவிகள் தோ்வெழுத வேண்டும். மற்றவற்றை அரசு பாா்த்துக் கொள்ளும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com