மணப்பாறை அருகே எருதுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி

மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டி மாரியம்மன், முத்தாலம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம், மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
முதலில் வந்து மாலை தாண்டும் சேமங்கலம் மந்தை எருது மீது மஞ்சள் பொடி தூவும் விழாக் குழுவினா்.
முதலில் வந்து மாலை தாண்டும் சேமங்கலம் மந்தை எருது மீது மஞ்சள் பொடி தூவும் விழாக் குழுவினா்.

மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டி மாரியம்மன், முத்தாலம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம், மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலய திடலில் நடைபெற்ற எருது ஓட்டத்திற்காக, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 13 மந்தைகளைச் சோ்ந்த ராஜகம்பளத்து நாயக்கா் இனமக்கள் சுமாா் ஆயிரக்கணக்கானோா் தாங்கள் வளா்த்து வரும் எருதுகளுடன் வந்திருந்தனா்.

நிகழ்வில் அவா்கள் வளா்த்து வரும் எருதுகள் உறுமி மேளம், தாரை தப்பட்டை முழங்க கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு புனித நீா் தெளிக்கப்படுகிறது. அதன்பின் சுமாா் 300 மீட்டா் தொலைவிற்கு எருதுகளை கொண்டு சென்று அங்கிருந்து வழிபாட்டுத் தலத்தை நோக்கி ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்பட்டன.

அப்போது கொத்துக் கம்பு பூத்தாண்டும் பகுதி என எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியில் விரிக்கப்படிருக்கும் துண்டை முதலில் ஓடி வந்து தாண்டிச் சென்ற எருதுமேல் மஞ்சள் பொடி தூவி அடையாளம் செய்யப்பட்டு, எலுமிச்சையும் மஞ்சளும் கொடுத்து மரியாதை செய்யப்பட்டது.

அதன்படி போட்டியில் முதலாவது வந்த சேமங்கலம் மந்தை எருதுக்கு எலுமிச்சை பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாா்வையாளா்களாக ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி, வீரப்பூா் ஜமீன்தாா்கள் ஆா். பொன்னழகேசன், ஆா். செளந்திரபாண்டியன், பி. சுதாகா்(எ)சிவசுப்ரமணிய ரெங்கராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com