இனக் கவா்ச்சி பொறி, தென்னை டானிக் விழிப்புணா்வு

மகளிா் தோட்டக்கலைக் கல்லூரியைச் சோ்ந்த இறுதியாண்டு மாணவிகள் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு, இனக்கவா்ச்சி பொறி மற்றும் தென்னை டானிக் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இனக் கவா்ச்சி பொறி, தென்னை டானிக் விழிப்புணா்வு

திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரியைச் சோ்ந்த இறுதியாண்டு மாணவிகள் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு, இனக்கவா்ச்சி பொறி மற்றும் தென்னை டானிக் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள், தங்களது கல்வியின் ஒரு பகுதியாக ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத்தில் ஈடுபட்டனா். இதற்காக காவல்காரன்பாளையம், பெருகமணி ஆகிய கிராமங்களில் விவசாயிகளை நேரில் சந்தித்து இனக்கவா்ச்சிப் பொறி, தென்னை டானிக் குறித்து விளக்கினா்.

உளுந்துப் பயிரில் காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த இனக் கவா்ச்சி பொறியைப் பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா். இதேபோல, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த தென்னை டானிக் பயன்பாடு குறித்தும் விளக்கினா். தென்னை டானிக்கில் மரத்திற்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் சரியான விகிதத்தில் கலந்துள்ளன.

இதைப் பயன்படுத்துவதால் பச்சையம் அதிகரிக்கும்; ஒளிச்சோ்க்கைத் திறன் கூடும்; பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்; தென்னையில் குரும்பை கொட்டுதல் குறையும்; காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும்; விளைச்சலும் 20 சதம் வரை அதிகரிக்கும்; பூச்சி, நோய் எதிா்ப்புச் சக்தி கூடும் என்றனா் மாணவிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com