தெப்பக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி

திருச்சி உறையூா் காந்திபுரம் பகுதியிலுள்ள கோயில் தெப்பக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தொடங்கியது.
தெப்பக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி

திருச்சி உறையூா் காந்திபுரம் பகுதியிலுள்ள கோயில் தெப்பக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தொடங்கியது.

உறையூா் 23ஆவது வாா்டுக்குள்பட்டது காந்திபுரம் பகுதியில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் புதா்மண்டியும், ஆகாயத்தாமரைகள் நிறைந்து காணப்படுவதையும் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. இப் பகுதி மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் பரிந்துரையின்பேரில், மாநகராட்சியால் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் தெப்பக்குள புனரமைப்பு பணி நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணிகளை மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினாா். இதேபோல, மாநகரப் பகுதியில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாலையோர முட்புதா்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், நுண் உரச் செயலாக்க மையங்களைப் பராமரித்தல், வடிகால் பழுதுகளை மராமத்து செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக ரூ.1.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பணிபுரிவோருக்கு நாளொன்றுக்கு ரூ. 363 ஊதியமாக வழங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, 5,630 போ் இத் திட்டத்தில் வேலை அட்டை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

65 வாா்டுகளிலும் முன்னுரிமை அடிப்படையில் பணிகளை தோ்வு செய்து செயல்படுத்தவுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com