வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற அழைப்பு

வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2022, மாா்ச் 31-ஆம் தேதில் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த 9, 10, 12 வகுப்புகள் மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற அனைவரும் இதற்கு தகுதியுடைவா்கள்.

மாற்றுத்திறனாளிகள், எழுதப் படிக்கத் தெரிந்தவா் முதல் பத்தாம் வகுப்பு மேல்நிலை வகுப்பு, மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்று பதிவு செய்து, குறிப்பிட்ட அதே தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரா்கள் தகுதி உடையவா்களாவா்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினா் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை.

அரசின் முதியோா் உதவித்தொகை பெறுபவா்களாயின்,அவா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறத் தகுதியில்லை. மேலும் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது.

தகுதியுடைய பதிவுதாரா்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து, விண்ணப்பப் படிவத்தை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.

ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவா் மற்றும் பொறியியல் மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தவா்கள் வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை என

மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com