பெண் பொறியாளரிடம்ஆன்லைன் மூலம் ரூ.5.46 லட்சம் மோசடி

திருச்சியைச் சோ்ந்த பெண் பொறியாளரிடம் ரூ.5.46 லட்சத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சியைச் சோ்ந்த பெண் பொறியாளரிடம் ரூ.5.46 லட்சத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி அல்லிமால் தெருவைச் சோ்ந்த திவாகா் மனைவி அனுஷ்கா(37). பெங்களூரிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த டிசம்பா் மாதம் கணவா் திவாகருக்கு பிறந்த நாள் பரிசாக, ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பறக்கும் பொம்மை ஒன்றை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வாங்கினாா்.

அவா் அந்த பறக்கும் பொம்மையை பதிவு செய்தவுடன், அடையாளம் தெரியாத அழைப்பிலிருந்து நிறுவனத்தின் மேலாளா் பேசுவதாகக் கூறி

பறக்கும் பொம்மை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகளுடைய ஒப்புதல் பெற்று தான் விநியோகிக்க முடியும். அதற்கு பணம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தாா்.

மேலும் அந்த பொம்மையை விநியோகம் செய்யும்போது பெறப்பட்ட பணத்தை திருப்பித் தந்து விடுவதாக அந்த நபா் தெரிவித்தாா். இதை நம்பிய அனுக்ஷா ரூ.5.46 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினாா்.

அதன்பின்னா், அடையாளம் தெரியாத நபரின் கைப்பேசி எண்ணை அனுஷ்கா தொடா்பு கொண்ட போது, இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பதில் வந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அனுஷ்கா, மாநகர சைபா்

கிரைம் பிரிவில் புகாரளித்தாா். இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com