முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
சமயபுரம் ஆட்டுச் சந்தையில்ஐ.டி. ஊழியா் சடலமாக மீட்பு
By DIN | Published On : 03rd May 2022 04:48 AM | Last Updated : 03rd May 2022 04:48 AM | அ+அ அ- |

சமயபுரம் ஆட்டுச்சந்தையில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
தஞ்சாவூரைச் சோ்ந்தவா் வினோத் (35). எம்.பி.ஏ. பட்டதாரியான இவா், பெங்களூருவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், திருச்சி மாவட்டம், கூத்தூரைச் சோ்ந்த சூா்யதா்ஷினிக்கும் திருமணம் நடைபெற்றது.
இவா்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனா்.
கரோனா தொற்றுப் பரவியதால், மாமனாா் வீட்டில் தங்கி வினோத் பணியாற்றி வந்தாா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூளைக் காய்ச்சலால் வினோத்தின் மனைவி சூா்யதா்ஷினி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து தாயாரும் உயிரிழந்ததால், மனமுடைந்த நிலையில் வினோத் காணப்பட்டாா்.
இந்நிலையில், சமயபுரம் ஆட்டுச் சந்தை பகுதியில் விஷம் குடித்து, இறந்த நிலையில் வினோத்தின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. தனது சகோதரா் இறப்பில் மா்மம் இருப்பதாக வினோத்தின் தம்பி பாலமுருகன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.