வனத்துறை அலுவலகத்தைமுற்றுகையிடும் போராட்டம்

துறையூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

துறையூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

த. பாதா்பேட்டையில் 22.46 கிலோ கிராம் எடையில் சந்தன மரக்கட்டைகளை சட்டத்துக்கு விரோதமாக வைத்திருந்ததாகக் கூறி, அண்மையில் இருவருக்கு துறையூா் வனத்துறையினா் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வனத்துறையினா் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, இந்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறை விசாரணை

நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரினா்.

இந்த நிலையில் உப்பிலியபுரம் ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துக்குமாா் தலைமையில், துறையூரிலுள்ள வனத்துறை அலுவலக,த்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தகவலறிந்த வனம், காவல் மற்றும் வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேசினா். ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அரசு அலுவலா்கள் கூறியதால், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com