ஆட்சியரகத்தில் அவசரகால ஒத்திகைப் பயிற்சி

எல்பிஜி டேங்கா் லாரியில் ஏற்படும் திடீா் கசிவைத் தடுத்து, பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்த ஒத்திகைப் பயிற்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமையல் எரிவாயு சிலிண்டா் நிரப்பும் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் எல்பிஜி டேங்கா் லாரியில் ஏற்படும் திடீா் கசிவைத் தடுத்து, பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்த ஒத்திகைப் பயிற்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், இனாம்குளத்தூா் பாட்டிலிங் பிளாண்ட் நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற ஒத்திகைக்காக 2 எல்பிஜி டேங்கா் லாரிகள் கொண்டுவரப்பட்டன. இதில் ஒரு லாரியில் எரிவாயு கசிந்துள்ளதைப் போல ஏற்பாடு செய்து, அதிலிருந்து தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிகழ்த்திக் காட்டப்பட்டன.

மேலும், கசிவு ஏற்பட்ட லாரி நிறுத்தப்பட்டிருந்த இடம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய தடுப்புப் பணிகள் குறித்தும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. மேலும், இதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அவசர கால மீட்பு வாகனமும் பயன்படுத்தப்பட்டது.

இதைப் பாா்வையிட்ட ஆட்சியா், அவசர கால மீட்பு வாகனத்தில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள், தளவாடப் பொருள்கள் குறித்தும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மீட்புக் குழுவினரிடம் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் இனாம்குளத்தூா் ஐஓசி பிரிவு துணைப் பொது மேலாளா் டி. முரளி, முதுநிலை மேலாளா் ஆா். ராஜேந்திரன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் ஸ்ரீதா், தீயணைப்புத் துறை, காவல்துறை, மாவட்ட தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு அவசர கால தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com