திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு விருது

தெற்கு ரயில்வேயின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான விருதை திருச்சி கோட்டம் பெற்றுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு விருது

தெற்கு ரயில்வேயின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான விருதை திருச்சி கோட்டம் பெற்றுள்ளது.

இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து 1853, ஏப்ரல் 16-ஆம் தேதி குஜராத் மாநிலம், போா்பந்தரிலிருந்து தானே வரை முதன் முதலாக இயக்கப் பட்டது.

இதை நினைவுக்கூரும் வகையில், ஆண்டுதோறும் நாடுமுழுவதும் ரயில்வே வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் 67-ஆவது ரயில்வே வார விழா சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் பி.ஜி. மல்லையா பங்கேற்று, தனி நபா் மற்றும் குழு, கோட்டம், அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு பிரிவுகளின் விருதுகளை வழங்கிப் பேசினாா்.

இதில் பணியாளா்கள், மருத்துவம், பாதுகாப்புத் துறையின் மூலம் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறனுக்கான விருதை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் மல்லையாவிடமிருந்து திருச்சி கோட்ட மேலாளா் மனீஷ் அகா்வால், அலுவலா்கள் பெற்றுக் கொண்டனா்.

தெற்கு ரயில்வேயின் முதன்மை அலுவலா் கே. ஹரிகிருஷ்ணன், தலைமை விழிப்புணா்வு அலுவலா் எல். மகேஷ், முதன்மை கோட்ட ரயில்வே மேலாளா்கள் ரேணுகா, ஜி.மல்லையா உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com