போதை மாத்திரை விற்பனை: 4 மாதங்களில் 369 போ் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள், பொருள்களை விற்ாக, கடந்த 4 மாதங்களில் 369 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள், பொருள்களை விற்ாக, கடந்த 4 மாதங்களில் 369 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களில் 24 வழக்குகள் பதியப்பட்டு, 61 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காந்திசந்தை பகுதியில் தமிழ்ச்செல்வி (52), எடமலைப்பட்டிபுதூரில் குமாா் (40), பாலக்கரையில் நவலடியான் (46), கே.கே.நகா் பகுதியில் சக்திவேல் ஆகிய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனையில் ஈடுபட்டதாக 12 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 1550 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அரியமங்கலம் அரவிந்த், ஷெப்ரின், வில்சன்ஆகிய மூவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மாநகரில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக 296 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மொத்தமாக போதை மாத்திரைகள், மருந்துகள் விற்பனையில் ஈடுபட்ட 369 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com