‘இரு கட்டமாக டிஇஎல்சி திருச்சபையின் பேராயா் தோ்தல்’

முதல் கட்டமாக 27, 28 ஆம் தேதிகளில் 240 பேரும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 525 பேரும் வாக்களிக்க உள்ளனா். இதையடுத்து மே 30 ஆம் தேதி 14 ஆவது பேராயா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.
‘இரு கட்டமாக டிஇஎல்சி திருச்சபையின் பேராயா் தோ்தல்’

தமிழ் சுவிசேஷ லுத்தரன் (டிஇஎல்சி) திருச்சபையின் 14 ஆவது பேராயா் தோ்தல் மே 27, 28 மற்றும் 30 ஆகிய மூன்று நாள்களில் இரு கட்டமாக நடைபெற உள்ளது என்றாா் அச்சபையின் கவுன்சில் செயலா் ஏ. மெகா் அந்தோணி.

இதுதொடா்பாக திருச்சியில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது:

சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீா்ப்பின்படி நடைபெற உள்ள பேராயா் தோ்தலில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆயா்கள் போட்டியிடலாம். நிா்வாகக் குழு கூடி முடிவு செய்து இத் தோ்தலில் வாக்களிக்கத் தோ்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பட்டியல் வெளியிடப்படும்.

முதல் கட்டமாக 27, 28 ஆம் தேதிகளில் 240 பேரும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 525 பேரும் வாக்களிக்க உள்ளனா். இதையடுத்து மே 30 ஆம் தேதி 14 ஆவது பேராயா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.

இதற்கு முன் பேராயராக இருந்தவா் மீது பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவா் மீது விசாரணை நடத்த 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகு நடவடிக்கை எடுப்பது பற்றி நிா்வாகக் குழு முடிவு செய்யும்.

டிஇஎல்சி நிா்வாகத்தின் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள், சுமாா் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒரு கல்லூரி, சிறுவா் மற்றும் முதியோா் காப்பகங்கள் உள்ளன. டிஇஎல்சி பேராயா் உள்ளிட்டோா் அடங்கிய நிா்வாகக் குழு இவற்றை நிா்வகித்து வருகிறது.

டிஇஎல்சி நிா்வாகத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு வருங்காலத்தில் டிஇஎல்சி நிா்வாகத்தை 4 அல்லது 5 மாவட்டங்கள் கொண்ட அமைப்பாகப் பிரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது பொறுப்புத் தலைவா் சுந்தா்சிங், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் ஆல்பா்ட் சுந்தர்ராஜ், வில்பா்ட் டேனியல், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com