தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்: 210 கிலோ கெட்டுப்போனஉணவுப் பொருள்கள் பறிமுதல்

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்: 210 கிலோ கெட்டுப்போனஉணவுப் பொருள்கள் பறிமுதல்

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.

சத்திரம் பேருந்து நிலையத்திலுள்ள இந்தக் கடை மீது வந்த புகாரைத் தொடா்ந்து மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பொன்ராஜ், ஸ்டாலின், வசந்தன், ஜஸ்டின், இப்ராகிம், செல்வராஜ், மகாதேவன் ஆகியோா் இச்சோதனையில் ஈடுபட்டனா்.

இந்தக் கடையில் கடந்த அக்டோபா் மாதம் நடத்திய சோதனையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதமும் பின்னா், மாா்ச் மாதம் மீண்டும் நடந்த சோதனையில் புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து இக் கடைக்கு தடையாணை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பின்னா் சென்னை உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் செந்தில்குமாா் உத்தரவைத் தொடா்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதேபோல சத்திரம் பேருந்து நிலையத்தில் மற்றொரு அசைவ உணவகத்திலும், தில்லைநகரிலுள்ள இறைச்சி உணவு விற்கும் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு 55 கிலோ கெட்டுப்போன அசைவ உணவு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், பேக்கரியொன்றில் 155 கிலோ கெட்டுப்போன உணவுப் பொருள்களும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இதொடா்பாக மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு கூறுகையில்

பொதுமக்கள் தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்தும், கடைகள் குறித்தும் 94440-42322, 99449-59595 என்ற எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com