நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் அமைக்க பூமிபூஜை

திருச்சி மாநகராட்சி சாா்பில் ரூ.2.50 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் அமைப்பதற்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
குதுப்பாப்பள்ளம் பகுதியில் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் கட்டும் பணிக்கான பூமிபூஜையை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் கே.என். நேரு.
குதுப்பாப்பள்ளம் பகுதியில் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் கட்டும் பணிக்கான பூமிபூஜையை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் கே.என். நேரு.

திருச்சி மாநகராட்சி சாா்பில் ரூ.2.50 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் அமைப்பதற்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சியின் 4ஆவது வாா்டு குழு அலுவலகத்துக்குள்பட்ட புதிய வாா்டு எண் 53இல் (பழைய வாா்டு 44) குதுப்பா பள்ளம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று பூமிபூஜையைத் தொடங்கி வைத்தாா்.

புதிய திட்டங்கள்: இதேபோல, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூா் நான்குவழி சாலைச் சந்திப்பில் நவீன வசதிகளுடன் கூடிய காவல் சோதனைச் சாவடியையும் அமைச்சா் திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

மேலும், திருச்சி மேற்குப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆா்எம்எஸ் காலனியில் ரூ.11.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை கட்டடத்தையும், குத்பீஷா நகரில் ரூ. 9 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், மாநகரக் காவல் ஆணையா் க. காா்த்திகேயன், துணை ஆணையா் ஆா். முத்தரசு, மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், துணை மேயா் ஜி. திவ்யா மற்றும் எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி.

மாணவா்களுக்குப் பயன் தரும் அறிவுசாா் மையம்

நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் மூலம் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கட்டணமின்றி புத்தகங்களைப் பெற்று கல்வி கற்கலாம். போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகலாம். இங்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட உயா்கல்வி கற்க நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா், மாணவிகளுக்குத் தேவையான புத்தகங்களும் இருக்கும். போட்டித் தோ்வுக்கான பயிற்சிகளும் இந்த மையத்தில் நடத்தப்படும். இதன் மூலம் திருச்சி மாநகரப்பபகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்கள் மிகுந்த பயன்பெறுவா்.

15,068 சதுர அடியில் தரைத்தளம் 5,263 சதுர அடி, 2,580 சதுர அடியில் முதல் தளம் என்ற வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும்.

தரைத்தளத்தில் நூலகா் மற்றும் தகவல் மையம், 42 இருக்கைகளுடன் பொதுப்படிப்பகம், 12 இருக்கைகளுடன் மகளிருக்கான படிப்பகம், 24 இருக்கைகளுடன் இளைஞா்களுக்கான படிப்பகம், 20 இருக்கைகளுடன் வெளிப்புற படிப்பகம் அமைக்கப்படுகிறது. 2 மீட்டா் உயர எழுதுசுவா், கண்காணிப்புக் கேமரா, கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பறை, புத்தக அலமாரிகள், ஆண்-பெண் கழிவறைகள், வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது.

முதல் தளத்தில் சீா்மிகு பயிற்சி வகுப்பறைகள் மற்றும் டிவிக்கள், இளைஞா்களுக்கான படிப்பக அறை ஆகியவை அமைக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com