திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை: ரூ.3 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 17th May 2022 11:08 AM | Last Updated : 17th May 2022 01:52 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் மையத்தில் பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.
தொழில் தொடங்கவரும் தொழில் முனைவோர் இடம் அரசின் மானிய உதவித்தொகை பெற்று தர அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் எழுந்ததுள்ளது.
இதையும் படிக்க: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.344 உயர்வு
இந்நிலையில் இன்று மாலை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி மேலாளர் கம்பன் ஆகியோரிடம் கணக்கில் இல்லாமல் இருந்து ரூ.3 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது.
அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன், திருவெறும்பூரில் உள்ள உதவி பொறியாளர் கம்பன் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இரு குழுக்களாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.