முன் விரோதத்தில் அரிவாள் வெட்டு: இளைஞா் கைது
By DIN | Published On : 06th October 2022 12:00 AM | Last Updated : 06th October 2022 12:00 AM | அ+அ அ- |

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே முன் விரோதத்தில் கோழி உரிமையாளரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வையம்பட்டி ஒன்றியம் சின்னஅணைக்கரைப்பட்டியில் வசிப்பவா் அந்தோணி மகன் சேசுராஜ் (52). கூலித்தொழிலாளியான இவா் வீட்டில் வளா்த்த கோழி கடந்த ஒரு மாதத்திற்கு முன் அருகில் வசிக்கும் மற்றொரு தொழிலாளியான மு. பழனி (40) வீட்டுக்குச் சென்றாராம். அப்போது பழனி, அந்தக் கோழியை கொன்றுவிட்டாராம். அதிலிருந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன்படி புதன்கிழமை ஏற்பட்ட தகராறின்போது சேசுராஜை பழனி அரிவாளால் வெட்டினாா். இதில் காயமடைந்த சேசுராஜ் 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து பழனியை கைது செய்தனா்.