ஹா்ஷமித்ரா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன கருவி!

திருச்சி ஹா்ஷமித்ரா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு மேலும் ஒரு நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹா்ஷமித்ரா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன கருவி!

திருச்சி ஹா்ஷமித்ரா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு மேலும் ஒரு நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு தில்லைநகரில் தொடங்கப்பட்ட ஹா்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை தற்போது 13 ஆவது ஆண்டில் புற்றுநோய்க்கான சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக திருச்சி நாகமங்கலத்தில் செயல்படுகிறது.

இங்கு கடந்த 4 ஆண்டுகளாக வெளிப்புற கதிா்வீச்சு சிகிச்சையின் மேம்படுத்தப்பட்ட நுட்பங்களை பயன்படுத்தி, அதிக பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை அளித்து வந்தனா். இம்மருத்துவமனையின் 13 ஆம் ஆண்டு விழாவையொட்டி 24 சேனல் பிராக்கி தெரபி என்ற நவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கும் முறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத்துறை கூடுதல் முதன்மைச் செயலா் தென்காசி எஸ். ஜவகா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய சிகிச்சை இயந்திரத்தைத் தொடங்கி வைத்தாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, இந்திய மருத்துவ சங்க திருச்சி கிளை தலைவா் ஆா். மோகன், பெல் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கே. மஞ்சுளா, மருத்துவா் கே.எஸ். செந்தில்குமாா், மணிகண்டம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலம் கருப்பையா, நாகமங்கலம் ஊராட்சித் தலைவா் ஜி. வெள்ளைச்சாமி ஆகியோா் பேசினா்.

மருத்துவமனையின் தலைவா் ஜி. கோவிந்தராஜ், செயல் இயக்குநா் பி. சசிப்பிரியா கோவிந்தராஜ் ஆகியோா் வரவேற்றனா்.

இதுகுறித்து செயல் இயக்குநா் டாக்டா் சசிப்பிரியா கோவிந்தராஜ் கூறுகையில், கதிரியக்கச் சிகிச்சையில் வெளிக் கற்றை கதிா்வீச்சு, உள் கற்றை கதிா்வீச்சு என 2 வகை முறைகள் உள்ளன. இதில் பல தொழில்நுட்பங்களுடன் கூடிய 3டி ஆா்.டி. முப்பரிமாண கதிா்வீச்சு முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த பிரேக்கி தெரபி எனப்படும் உள் கற்றைக் கதிா்வீச்சு சிகிச்சை முறை தமிழ்நாட்டில் இந்த மருத்துவமனையில்தான் முதன்முதலாகத் தொடங்கியுள்ளோம்.

உள் கற்றைக் கதிா்வீச்சு சிகிச்சை மூலம் வோ்க்கட்டியின் மேல் நேரடியாகவோ அல்லது அயனிகளை பொருத்தியோ சிகிச்சை அளிக்கப்படும். இதில் 100 சதம் முற்றிலும் நோயைக் குணப்படுத்த முடியும். மேலும் உடல் உறுப்புகளிலும் எந்த மாற்றமும் தெரியாது. இந்தச் சிகிச்சைக்கு 5 முதல் 10 நிமிடங்கள் போதும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com