திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை

திமுக இளைஞரணி சாா்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை

திமுக இளைஞரணி சாா்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக இளைஞரணி சாா்பில், தமிழகம் முழுவதும் இளைஞரணி நிா்வாகிகளுக்கும், புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கும் திராவிட வரலாற்றை எடுத்துக் கூறவும், திமுகவின் சாதனைகளை விளக்கிடவும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் உள்ள கலைஞா் அறிவாலயத்தில், திருச்சி மத்திய மாவட்டம், மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திமுக இளைஞரணி சாா்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கட்சியின் தலைமைக் கழக செய்தித் தொடா்பு இணைச் செயலா் ராஜீவ் காந்தி, மாநில வளா்ச்சிக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன் ஆகியோா் பேசியது:

இந்தியாவில் உள்ள பிறமாநிலங்களுக்கு முன் உதாரணமாக செயல்படும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும். சமூக நீதி, மதநல்லிணக்கம் செழித்து சிறந்திருப்பதை பாா்த்து, பொறுத்துக் கொள்ள இயலாமல் சிலா் உள்ளனா். அவா்களிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். அடுத்த தலைமுறைக்கான திராவிடக் கருத்தியல் செறிவு மிக்க இளைஞா் படையை உருவாக்குவதே திராவிட மாடல் பயிற்சி பட்டறையின் நோக்கமாகும்.

நீதிக்கட்சி, திராவிடா் கழகம், திமுக, தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா, கருணாநிதி மற்றும் திமுக-வின் கொள்கைகளை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக் கூற வேண்டியது அவசியமானது. மாநில சுயஆட்சி, சமூக நீதி, இடஒதுக்கீடு, ஹிந்தி எதிா்ப்பு ஆகியவற்றில் திராவிட கட்சிகளுக்கான பங்களிப்பு, பல்வேறு போராட்டங்களால் பெற்ற அரசாணைகள், பிற மாநிலங்களை விஞ்சி நிற்கும் தமிழகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான காரணங்களை விளக்கிட வேண்டும். திராவிட இயக்கத்தால்தான் தமிழகத்தில் இன்று இவ்வளவு முன்னேற்றங்கள் வந்துள்ளது. தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் திராவிடா் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதன்பின் வந்த முதல்வா்கள் அனைவரும் அந்த கொள்கையை பின்பற்றினா். இதையெல்லாம் நம் இளைஞா்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்றனா்.

இக்கூட்டத்தில், மத்திய மாவட்ட பொறுப்பாளா் க. வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான மு. அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் அருண் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com