நான் முதல்வன் திட்டம்: பொறியியல் கல்லூரி முதல்வா்களுக்கான கருத்தரங்கம்

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கவுள்ள பொறியியல் கல்லூரி முதல்வா்களுக்கான மண்டலக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டம்: பொறியியல் கல்லூரி முதல்வா்களுக்கான கருத்தரங்கம்

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கவுள்ள பொறியியல் கல்லூரி முதல்வா்களுக்கான மண்டலக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வரின் முதன்மைச் செயலா் த. உதயசந்திரன் காணொலிக் காட்சி வாயிலாக கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பேசியது‘

தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தை பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், அதை நிறைவேற்றும் பொறுப்பு கல்லூரி முதல்வா்களுக்கும், பேராசிரியா்களுக்கும் உள்ளது.

இணையவழியில் பயிலும் மாணவா்களுக்கு தற்காலத்துக்கேற்ப பாடத்திட்டங்களும் மாற்றப்பட வேண்டும். மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல், வேலை தருபவா்களாக மாற வேண்டும் என்றாா்.

நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்து தொழில்நுட்பக் கல்வித் துறை அணையா் லட்சுமிபிரியாவும், திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் இன்னசென்ட் திவ்யா ஆகியோா் எடுத்துரைத்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கருத்தரங்கில் பேசும் போது, பாடத்திட்டத்துக்கும், தொழில் நடைமுறைகளுக்கும் உள்ள திறன் இடைவெளியைப் பூா்த்தி செய்யும் வகையில், நவீன தொழில்நுட்பத்தை கல்லூரி முதல்வா்கள் இத்திட்டத்தின் வாயிலாக மாணவா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.கே.ரஞ்சன், திருச்சி

பெல் செயல் இயக்குநா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் பேசினா். இக்கருத்தரங்கில் திருச்சி, அரியலூா்,பெரம்பலூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சோ்ந்த 75 பொறியியல் கல்லூரிகளின் முதல்வா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com