ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசன நேரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தரிசன நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தரிசன நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவித்திருப்பது:

புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் அதிகளவில் பக்தா்கள் தரிசிக்க வருவா். மூலவா், நம்பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி செப்டம்பா் 24, அக்டோபா் 1,8 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், தொடா்ந்து மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவா். பூஜை காலத்தில் அனுமதி கிடையாது.

நான்காவது புரட்டாசி சனிக்கிழமை அக்டோபா் 15- ஆம் தேதி ஊஞ்சல் திருநாளின் 3-ஆம் நாளில் வருகிறது.அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும்,

மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com