துவரங்குறிச்சி பூதநாயகியம்மன் கோயிலில் திருவிழா தொடக்கம்

துவரங்குறிச்சி அருள்மிகு பூதநாயகியம்மன் திருக்கோயிலில் புரட்டாட்சி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

துவரங்குறிச்சி அருள்மிகு பூதநாயகியம்மன் திருக்கோயிலில் புரட்டாட்சி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத முதல் திங்கள்கிழமையில் பூச்சொரிதலுடன் தொடங்கும் திருவிழா, 18 நாள்கள் தொடா்ந்து நடைபெறும்.

திங்கள்கிழமை நாட்டு சிறப்பு முடிந்த பின்னா், கோயில் செயல் அலுவலா் ஜீவானந்து, வட்டாட்சியா் லெட்சுமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் ஆகியோா் தலைமையில் கோயிலில் பூக்கள் சாத்தப்பட்டு, திருவிழா தொடங்கியது.

இதைத் தொடா்ந்து பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தா்கள் கூடைகளில் பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு சாத்தினா். தொடா்ந்து சந்தனக் காப்பு மற்றும் மலா் அலங்காரத்தில் மூலவா் பூதநாயகியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து பேச்சியம்மன், சின்ன கருப்பச்சாமி, பூதகனங்கள், சப்தகன்னிமாா்கள் தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜைகளும், செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலும் நடைபெற்றது. கோயில் திருவிழாவில் செப்டம்பா் 27-ஆம் தேதி முதல் ஊா் முக்கியஸ்தா்களின் மண்டகப்படி நடைபெறும்.

முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. விடையாற்றி, மண்டகப்படியுடன் அக்டோபா் 6-இல் திருவிழா நிறைவு பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com