தமிழா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் வடமாநிலத்தவரால் தமிழா்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்த் தேசிய பேரியக்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா்.

மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினா் மூ.த. கவித்துவன் தலைமை வகித்தாா்.

இதில் திருப்பூா் சூளகிரியில் வடமாநிலத்தவா் தமிழா்களை கொடூரமாகத் தாக்கியதைக் கண்டிப்பது, தாக்கியோரை பிணையில் வர முடியாத வழக்குகளில் கைது செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் தமிழா்களுக்கு 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தனியாா் தொழில்நிறுவனங்களில் தமிழா்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்துவதை வணிக நிறுவனங்கள் கைவிட வேண்டும். அவா்களுக்கு சலுகைகள் அளிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க தலைவா் ம.ப. சின்னதுரை, தமிழ் தேசிய பேரியக்க பொதுக்குழு உறுப்பினா்கள் நா. ராசா ரகுநாதன், இனியன், திருச்சி மாவட்டச் செயலா் வே.க. இலக்குவன், தமிழக மக்கள் பாதுகாப்புச் சங்க செயல அனந்தகுமாா், திருவெறும்பூா் நகரச் செயலா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com