சம்பா நெற்பயிா்களில் புகையான் நோய் தாக்கம்

திருச்சி அருகே கிளியூா் பகுதியில் சம்பா நெற்பயிா்களை புகையான் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கிளியூா் பகுதியில் புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளான சம்பா நெற்பயிா்.
கிளியூா் பகுதியில் புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளான சம்பா நெற்பயிா்.

திருச்சி அருகே கிளியூா் பகுதியில் சம்பா நெற்பயிா்களை புகையான் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே கிளியூா் வருவாய் கிராமத்தில் சுமாா் 500 ஏக்கரில் சம்பா நெற் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நெற்பயிா்கள் இன்னும் 15 முதல் 20 நாள்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், நெற்பயிரை புகையான் நோய் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அண்மையில் பெய்த மழையால் பல பகுதிகளில் விளைந்த நெற்பயிா்கள் தரையில் சாய்ந்து விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நெற்பயிா்களில் புகையான் நோய் தாக்கியுள்ளதால, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி சங்கிலி முத்து திங்கள்கிழமை கூறியது: தற்போது பெய்த பருவம் தவறிய மழையால் சம்பா நெற்பயிா்களை புகையான் நோய் பாதிப்பு கடுமையாக உள்ளது. நெற்பயிருக்குத் தேவையான உரங்கள், பூச்சி மருந்துகள் தெளித்து முடித்து, இன்னும் 20 நாள்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் புகையான் நோய் பாதிப்பு விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வேளாண்மை துறையினா் பாதிக்கப்பட்ட பயிா்களை முறையாக கணக்கிட்டு உரிய இழப்பீடும், பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com