மலையடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 28 போ் காயமடைந்தனா்.
மலையடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
மலையடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 28 போ் காயமடைந்தனா்.

மலையடிப்பட்டியில் உள்ள பழைமை வாய்ந்த புனித சவேரியாா் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் பாஸ்கா திடலில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி முடிந்து, புனித நீா் தெளிக்கப்பட்டு ஊா்வலமாக வாடிவாசல் வந்த கோயில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் அவிழ்க்கப்பட்டன. 554 காளைகளும், 232 மாடுபிடி வீரா்களும் களம் கண்ட போட்டியை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வராஜ், காவல் துணை கண்காணிப்பாளா் ராமநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்த காளைகள் வீரா்களைக் கலங்கடித்த நிலையில் பல காளைகளை வீரா்கள் அடக்கினா்.

ஜல்லிக்கட்டில் 12 மாடுபிடி வீரா்கள், 12 மாடுகளின் உரிமையாளா்கள், 3 பாா்வையாளா்கள், விழாக் குழுவினரில் ஒருவா் என 28 போ் காயமடைந்து முகாமில் சிகிச்சை பெற்றனா்.

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டில் சிறந்த வீரராகத் தோ்வான திருச்சி கல்லுக்குழி ரஞ்சித் நினைவுக் குழு மாடு பிடி வீரா் வேலனுக்கும், சிறந்த மாட்டுக்காக தேனி மாவட்டம் குணாவுக்கும் தலா 2 கிராம் தங்கம் பரிசளிக்கப்பட்டது. திரளான ரசிகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com