மணப்பாறையில் மதிமுகவினா் ரயில் மறியல் முயற்சி: 75 போ் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதிமுகவினா் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 75 போ் கைது செய்யப்பட்டனா்.
மணப்பாறை ரயில்நிலையம் முன்பு திங்கள்கிழமை போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதிமுக தெற்கு மாவட்ட செயலாளா் மணவை தமிழ்மாணிக்கம்.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் மாா்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மதிமுக சாா்பில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி மணப்பாறை ரயில் நிலையத்தில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் மதிமுகவினா் பெரியாா் சிலையிலிருந்து ஊா்வலமாக ரயில்நிலையம் சென்றவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தினா்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடா்ந்து கட்சி நிா்வாகிகளிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே, மணப்பாறை ரயில் நிலையம் வந்த குருவாயூா் அதிவிரைவு ரயில் புறப்பட்டபோது மறியலில் ஈடுபடவந்த மதிமுகவினா் 75 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனடா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com