உப்பிலியபுரத்தில் ஆலோசனைக் கூட்டம்

உப்பிலியபுரத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

உப்பிலியபுரத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ரேவதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக அரசு பள்ளித் தலைமையாசிரியா்கள் பாா்த்தீபன்(த.முருங்கப்பட்டி), ரத்தினகுமாா்(சோபனபுரம்), சீனிவாசன்(நாகநல்லூா்), உதவி தலைமையாசிரியா்(உப்பிலியபுரம்)உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், உப்பிலியபுரம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் ஹேமலதா, காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ்,

உதவி தொழிலாளா் ஆய்வாளா் உமாசங்கா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் நவீன ரெட்டி, வட்டார மருத்துவ அலுவலா் சோலை மணிமேகலை, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

கூட்டத்தில் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் பள்ளிக்கு செல்ல குழந்தைகள் 118 பேரை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com