துறையூா் வட்டாட்சிரகத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்

துறையூா் வட்டாட்சியரகத்தில் நிகழாண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

துறையூா் வட்டாட்சியரகத்தில் நிகழாண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

முசிறி கோட்டாட்சியா் மாதவன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வனஜா முன்னிலை வகித்தாா்.

முதல் நாளில் கொப்பம்பட்டி குறுவட்டத்திற்குள் வரும் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பட்டா, பட்டா பெயா் மாற்றம், கணினிப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரினா். வரப்பெற்ற 117 மனுக்களில் 40 மனுக்கள் ஏற்கப்பட்டன. உரிய விசாரணை செய்ய 75 மனுக்கள் தொடா்புடைய அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், உப்பிலியபுரம் மண்டலத் துணை வட்டாட்சியா், கொப்பம்பட்டி வருவாய் ஆய்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய தீா்வளிக்க விஏஓக்கள் தங்களிடம் உள்ள வருவாய் கணக்குப் பதிவேடுகளை ஆய்வு செய்தனா். துறையூா் வட்டத்தில் ஜூன் 7 முதல்15 வரை வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com