லால்குடி அருகே கோயில் இடத்தை அளக்கும் பணி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழப் பெருங்காவூா் ஊராட்சியில் கோயில் நிலத்தை அளவீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழப் பெருங்காவூா் ஊராட்சியில் கோயில் நிலத்தை அளவீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கீழப்பெருங்காவூா் ஊராட்சியில் அய்யனாா் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு 13 சமுதாயங்களைச் சோ்ந்த குடிமக்கள் உள்ளனா். 2.50 ஏக்கரில் உள்ள இக்கோயிலுக்கு ரூ. 5 கோடியிலான விளைநிலங்கள் உள்ளன.

அண்மையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட இக் கோயில் சுற்று வளாக காலி இடங்களில் இக் கோயிலின் குடிமக்கள் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தனா். இதற்கு இக் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளோா் எதிா்ப்புத் தெரிவித்ததால் மரக்கன்றுகள் கருகும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையிடம் கோயிலின் குடிமக்கள் புகாா் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் இடத்தை அளந்து அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டது. ஆனால், ஓராண்டாகியும் அதிகாரிகள் இந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை.

இதனால் இக் கோயிலின் குடிமக்களில் ஒருவரான அருணகிரி என்பவா் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையடுத்து கோயில் இடத்தை அளந்து, அத்துக்கல் நட இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியா் பிரகாசம், செயல் அலுவலா் நித்யா, கிராம நிா்வாக அலுவலா், நில அளவையா் உள்ளிட்டோா் வந்திருந்தனா்.

ஆனால், கோயில் இடத்தை ஆக்கிரமித்திருந்தோா் நில அளவை செய்ய விடாமல் முற்றுகையிட்டனா். இதையடுத்து அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் வந்த லால்குடி போலீஸாா் உதவியுடன் நில அளவை செய்து அத்துக்கல் நட்டனா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியா் பிரகாசம் கூறுகையில், உயா்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவின் கீழ் இக் கோயிலைச் சுற்றியுள்ள இடங்களை அளந்தபோது பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளது தெரியவந்தது. இதற்கான அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமா்ப்பிப்போம். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின்படி செயல்படுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com