உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில் தெப்பத் திருவிழா

 திருச்சி, உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 திருச்சி, உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயில் தெப்பத் திருவிழா மாா்ச் 12ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் மாலை 6 மணிக்கு தாயாா் கருவறையிலிருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சென்றடைந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு தாயாா் கருவறையிலிருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபத்தை அடைந்தாா். மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை அலங்காரம் அமுது செய்து, தீா்த்த கோஷ்டி நடைபெற்றது. அதன் பின்னா் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினாா். இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பம் கண்டருளினாா். இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்திலிருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து, இரவு 10.15 மணிக்கு கருவறையை சென்றடைந்தாா்.

சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தீா்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சென்றடைகிறாா். அங்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னா் இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயாா் புறப்பட்டு பந்தக் காட்சியுடன் வீதி உலா வந்து தெப்ப மண்டபத்தை வந்தடைந்து, இரவு 10.15 மணிக்கு கருவறையை சென்றடைகிறாா். விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

Image Caption

திருச்சி உறையூா்யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் பக்தா்களுக்கு காட்சி அளித்த கமலவல்லி நாச்சியாா் ~திருச்சி உறையூா் கமலவள்ளி நாச்சியாா் கோயில் தெப்பக்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெப்போற்ஸவம். (உள்படம்) தெப்பத்தில் எழுந்தருளிய நாச்ச

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com