ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் வரவேற்பு

ராணுவத்தில் சுமாா் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று திருச்சி வந்த ராணுவ அதிகாரிக்கு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணுவத்தில் சுமாா் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று திருச்சி வந்த ராணுவ அதிகாரிக்கு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சோ்ந்தவா் சிதம்பரம் (60). கடந்த 30 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பொறியாளராக (டெக்னீஷியன்) பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளாா்.

காா்கில், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான், சீன ராணுவத்துடன் நடந்த மோதல்களின்போது, இவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ராணுவத்தில் இவரால் திறம்பட உருவாக்கப்பட்ட டெக்னீஷியன்கள் பலா் இன்று பல்வேறு இடங்களில் சிறப்பாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்று, போபாலிலிருந்து ரயில் மூலம் சொந்த ஊருக்கு செல்லும் வழியில்

செவ்வாய்க்கிழமை காலை திருச்சி ரயில் நிலையம் வந்த அவருக்கு, சிவகங்கை படை வீரா்கள் பாசறை, ஒருங்கிணைந்த தமிழக பட்டாளம், மணவை அக்னி சிறகுகள், சேயோன் ராணுவ பயிற்சி மையம் மற்றும் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் திருச்சியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றனா்.

ராணுவ அதிகாரி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தில், பல்வேறு இடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். நாட்டுக்கு சேவையாற்றும் வகையில் ராணுவத்தில் பணியாற்றியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதேபோல், இளைஞா்களும் ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com