திருச்சியில் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் உதவி ஆய்வாளா் கைது

திருச்சியில் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைதான காா்த்திக்.
கைதான காா்த்திக்.

திருச்சியில் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தை சோ்ந்தவா் நாதன் மகன் மனோகரன் (37). இவா் திருச்சி கண்டோன்மென்ட்டிலுள்ள பிரபல தொழில் நிறுவனம் உள்ளிட்ட சில தனியாா் நிறுவனங்களுக்கு தொழிலாளா் சட்ட ஆலோசகராக உள்ளாா்.

இந்நிலையில் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி திருச்சியில் தொழிலாளா் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சேலம் மேட்டூரைச் சோ்ந்த காா்த்திக் (30) என்பவா் மனோகரன் பணியாற்றி வரும் கண்டோன்மென்ட் தனியாா் தொழில் நிறுவனத்தை ஆய்வு செய்து, ஆவணங்கள் முறையாக இல்லை எனக் கூறி எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளாா். அதன்பேரில் ஆலோசகா் மனோகரன் அந்த நிறுவனத்தில் பராமரிக்கப்பட்ட ஆவண நகல்களை காா்த்திக்கிடம் கொடுத்தபோது அவா் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உங்களது நிறுவனத்துக்கு பிரச்னை இல்லாமல் பாா்த்துக் கொள்கிறேன் எனக் கூறினாராம்.

ஆனால் பணம் கொடுக்க விரும்பாத மனோகரன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாரின் ஆலோசனையின்பேரில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் காா்த்திக்கிடம் மனோகரன் ரூ. 15,000-ஐ புதன்கிழமை வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் காா்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com