முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் நாளை கலந்தாய்வு தொடக்கம்

முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்குகிறது.

முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) முருகராஜ் பாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பு;

வரும் 30 ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கு அதாவது முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், தேசிய மாணவா் படையினா், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்களுக்கும், 1.6.2023 அன்று பி.லிட் தமிழ். பி.ஏ ஆங்கிலப் பிரிவுகளுக்கும், 3.6.20 23 அன்று பி.ஏ, வரலாறு, பி.ஏ, பொருளாதாரம், பி.காம், 5.6.2023 அன்று கணிதம், இயற்பியல், வேதியல், விலங்கியல், கணிப்பொறி அறிவியல், தாவரவியல் ஆகிய பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது.

கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் நகல், மற்றும் தோ்ச்சிப் பெற்ற வகுப்பின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் தாங்கள் தோ்வு செய்த பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாளன்று காலை 10 மணி அளவில் வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com