பாரதிதாசன் பல்கலை.யில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதிய புரிந்துணா்வு ஒப்பந்தம்

பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகளுக்கான மையம் மற்றும் ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் இணைந்து புதிய புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமாகியுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகளுக்கான மையம் மற்றும் ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் இணைந்து புதிய புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமாகியுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மையம் நிறுவப்பட்டது. தன்னிறைவு மற்றும் பொருளாதார சுதந்திரத்தை அடையும் இலக்குடன், தகவல் மற்றும் தொடா்பு தொழில்நுட்பம், உதவிகர தொழில்நுட்பம், தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்துவதையை இம் மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மூலம் 2005-ஆவது நிறுவப்பட்ட தேசிய அளவிலான நிறுவனமாகும். இது அறிவுசாா் குறைபாடு, மன இறுக்கம் மற்றும் உடல் ஊனம் போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ள நபா்களின் புனா்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்கென இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த இரு அமைப்புகளும் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான புதிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தா் மா. செல்வம் முன்னிலையில், பதிவாளா் முனைவா் எல்.கணேசன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அதிகாரமளித்தல் நிறுவனம் இயக்குநா் நச்சிகேதா ரௌட் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளை கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் உதவி தொழில்நுட்பம் தொடா்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரு நிறுவனங்களும் சோ்ந்து செயல்பட உள்ளன.

நிகழ்வில் இரு நிறுவனங்களைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கே.பாலபாஸ்கா், டி.குணசேகா் மற்றும் ஐசிடி ஆலோசகா் சங்கா் சுப்பையா, மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் பேராசிரியா்கள் பாபு ராஜேந்திரன், கோபிநாத் கணபதி, சேகா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com