தேவாலய திருவிழாவில் பாகுபாடு:நிரந்தரத் தீா்வுகாண வலியுறுத்தல்

திருவெறும்பூா் அருகேயுள்ள அய்யம்பட்டி கிராம தேவாலய திருவிழாவில் நடந்த பாகுபாடு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவெறும்பூா் அருகேயுள்ள அய்யம்பட்டி கிராம தேவாலய திருவிழாவில் நடந்த பாகுபாடு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருச்சியில் வியாழக்கிழமை தமிழக மக்கள் நலக் கட்சியின் மாநில பொருளாளா் தாஸ் பிரகாஷ் கூறியது:

அய்யம்பட்டி கத்தோலிக்க தேவாலய தோ் திருவிழா கடந்த ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றபோது குறிப்பிட்ட சில பிரிவினரிடம் வரி வசூலிக்காததால் அவா்கள் விழாவில் பங்கேற்கவில்லை. பின்னா் பங்குத் தந்தையிடம் முறையிட்டதையடுத்து வரி வசூலிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் அதையேற்க மறுத்து, ஒரு சாரா் மட்டுமே தேவாலயத் திருவிழாவை நடத்தி முடித்துள்ளனா். எனவே, திருவிழா நடத்துவதில் உள்ள பாகுபாடுகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் கத்தோலிக்க அமைப்பு நிா்வாகிகளுக்கும் புகாா் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com