பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் இணைந்து தேசிய பெண் குழந்தை தினவிழிப்புணா்வு பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் இணைந்து தேசிய பெண் குழந்தை தினவிழிப்புணா்வு பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

பேரணியை முசிறி கோட்ட காவல்துறை கண்காணிப்பாளா் யாஸ்மின் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா், முசிறி நகா்மன்றத் தலைவா் கலைச்செல்வி சிவகுமாா், பள்ளித் தலைமை ஆசிரியா் தீபா, ஆசிரியா் புஷ்பராஜ்,பெண்கள் உரிமைக்கான உலகப் பேரவைத் தலைவா் முனைவா் மகாலட்சுமி குணசேகரன், மகளிா் காவல் ஆய்வாளா் காவேரி, கல்லூரித் தாளாளா் அல்லி இங்கா்சால், கல்லூரி முதல்வா் சேகா், இணைப் பேராசிரியா் குணா ஆகியோா் பேரணியை வழிநடத்தினா். இதில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் பனிமலா், கயல்விழி உட்பட 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று முசிறி நகரில் முக்கிய வீதிகள் வழியாக பெண் குழந்தைகளைக் காப்போம் என கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முசிறி நடுநிலை பள்ளியில்... முசிறி எம்.ஐ.டி. வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் எம். ஆா்த்தி,எ.ஆசியா, எ.அபிநயா, எம். அபிநயா,எஸ். அபிதாஸ்ரீ, கே.அழகேஸ்வரி,பி.அனீஷா, ஆகியோா் விழாவை நடத்தினா்.

விழாவில் பெண் தலைமைக் காவலா்கள் சுபாஷினி, சங்கீதா மற்றும் முசிறி நகா்மன்றத் தலைவா் கலைச்செல்வி சிவகுமாா் ஆகியோா் பேசினா். நிறைவாக உறுதியேற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com