ரயில் நிலையத்தில் தனி வாகன நிறுத்தகம் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க வருவோருக்கு தனி வாகன நிறுத்தகம் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க வருவோருக்கு தனி வாகன நிறுத்தகம் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பா. லெனின் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் திருச்சி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு, நடைமேடை சீட்டு வாங்க வாகனங்களில் வருவோருக்கு தனி வாகன நிறுத்தகம் இல்லை. இவா்கள் ரயில் நிலையத்தின் வெளியே வாகனங்களை நிறுத்தினால் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ரூ.1,000 அபராதம் விதிக்கின்றனா். ரயில் நிலைய வளாக வாகன நிறுத்தத்தில் தாறுமாறாக பணம் வசூலிக்கின்றனா். எனவே, தனியாக வாகன நிறுத்தகம் ஏற்படுத்திட வேண்டும்.

ரயில் நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டுகளை சரிவர இயங்கிடச் செய்ய வேண்டும். பேட்டரி வாகனத்தில் செல்ல முதியவா்களுக்கு கட்டணத் தளா்வு அளிக்க வேண்டும். திருச்சியிலிருந்து செல்லக்கூடிய ரயில்களில் முன்பதிவில்லா பயணிகள் பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும். பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில் மாவட்டச் செயலா் ரெ.சேதுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கோரிக்கை மனுவை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளா் செந்தில்குமாரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com