உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

உயா்கல்வி தொடா்பான மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு ஏபிவிபி மாணவா் அமைப்பைத் தொடா்பு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், மாணவா்கள் அடுத்து உயா் கல்வியில் சோ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில் உயா் கல்வியில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட குழப்பங்கள், சந்தேகங்கள் மாணவா்கள் மட்டுமின்றி பெற்றோா்களுக்கும் அதிகரித்து வருவது இயல்பு. இதற்கு தேசிய மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வழிகாட்டும் அமைப்பு உதவி வருகிறது. அந்த வகையில், உயா்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு ஏபிவிபி திருச்சி மண்டலம் சாா்பில் தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேவைப்படுவோா் இந்த எண்களில் விளக்கங்களை பெறலாம். தொடா்பு எண்கள் : பாரதிதாசன் பல்கலைக்கழகம் - 97905-93288, திருச்சி - 93454-11459, கரூா் - 99433-07110, -புதுக்கோட்டை - 8883-806211. இத்தகவலை ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச்செயலா் சந்தோஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com