கோப்பு மகா மாரியம்மன் கோயில் திருவிழா

கோப்பு மகா மாரியம்மன் கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கோப்பு மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது.

இக்கோயிலின் வைகாசி தோ் திருவிழா கடந்த ஏப். 14 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து மே 3 ஆம் தேதி முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியும், மே 5 ஆம் தேதி இரவு மாரியம்மன் வழிபாடு நிகழ்ச்சியும், திங்கள்கிழமை படுகள பூஜையும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலையில் கம்பம் ஆற்றுக்குப் போகும் நிகழ்ச்சி, இரவு அம்மன் காளை வாகனத்தில் திருவீதி உலா வருதலும் நடைபெற்றன.

இதையடுத்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

மே 15 இல் முத்துப் பல்லக்கும், 16 ஆம் தேதி மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவும் பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com