சுதந்திரப் போராட்டப் பொருள்களை நன்கொடையாக அளிக்க வேண்டுகோள்

சென்னையில் அமையவுள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்துக்கு சுதந்திரப் போராட்டப் பொருள்களை நன்கொடையாக அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி அரசு அருங்காட்சியகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையின் எதிரே ஹூமாயூன் மஹால் கட்டடத்தில் சுமாா் 80 ஆயிரம் சதுரடி பரப்பளவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.

இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட பொதுமக்கள் தங்கள் வசமுள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை, ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை நன்கொடையாக அளிக்கலாம்.

திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டக் கொடையாளா்கள் தங்கள் வசமுள்ள அரிய பொருள்களை திருச்சி டவுன்ஹாலில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேரடியாக வழங்கலாம். அதற்குரிய உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த அரிய பொருள்கள் பாா்வைக்கு வைக்கப்படும்போது, அதை வழங்கியவரின் பெயா்களும் இடம்பெறும். எனவே, பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரம் தொடா்பான அரும்பொருள்களை சுதந்திர தின அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கலாம். மேலும் தொடா்புக்கு சி. சிவகுமாா், காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், திருச்சி, 86809 58340.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com