கம்புக்கு களை பறிக்கப் போய்...

இந்தியப் பிரதமரின் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஆண்டில் பெரும்பாலான நாள்கள் மழையாலோ அல்லது
கம்புக்கு களை பறிக்கப் போய்...

இந்தியப் பிரதமரின் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

ஆண்டில் பெரும்பாலான நாள்கள் மழையாலோ அல்லது வறட்சியாலோ ஏழை மக்கள் கூலி வேலைக்குச் செல்ல முடியாமல் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது.

அடிப்படை உணவுக்காவது பணம் கிடைக்க வேண்டும் என்பதும், மற்றொன்று அதை இனாமாகத் தராமல் பொது வேலை நடந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதும்தான்.

பொது வேலைகள் என்றால் ஏரி, குளம் தூர் எடுத்தல், சாலைகள் செப்பனிடுதல், வாய்க்கால் புதுப்பித்தல் என்பன.

ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? மக்கள் கும்பல் கும்பலாக தட்டு, மண்வெட்டி சகிதம் காலையில் வேலைக்குச் செல்கிறார்கள்.

சாலைகள் செப்பனிட சுமார் 50 பேர்கள் செல்கிறார்கள். சாலையில் இரு பக்கங்களிலும் உள்ள நுனிப்புல்லை செதுக்கிவிடுகிறார்கள்.

ஏரி, குளம், கால்வாய் தூர் எடுப்பவர்கள் மண் எடுத்ததுபோல் பாத்தி கட்டிவிட்டு ஜாலம் காட்டுகிறார்கள். மதியம் மூன்று மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிட்டது என்று சொல்லி  60 முதல் 80 வரை கூலியைப் பெற்றுக்கொண்டு கூலியாள்கள் சென்றுவிடுகிறார்கள்.

ஆயிரக்கணக்கில் பில் கிழிகிறது. அரசியல் தொடர்புடையவர்கள் இதில் ஏஜென்டுகளாகப் பணியாற்றுகிறார்கள்.

 அவர்களுக்குப் பங்கு, அவர்களை நியமித்த அரசு இயந்திரங்களுக்குப் பங்கு என்று பெருமளவில் பணம் போய்ச்சேர்கிறது.

இந்த லட்சணத்தில் சில இடங்களில், வேலை என்று பேருக்குக்கூட செய்யாமல், வேலை நடந்ததுபோல பாவ்லா காட்டிவிட்டு, பில்லைக் கிழித்து அரசுப் பணத்தைக் கணக்குக் காட்டி விடுகிறார்கள்.

சொல்லப்போனால், மக்கள் வரிப்பணம் இத்திட்டத்தால் கூலியாகக் கொடுக்கப்பட்டது மூன்றில் ஒரு பங்கு. இடைத்தரகர்கள் வேலை செய்யாமலேயே சம்பாதித்தது மூன்றில் இரண்டு பங்கு.

ஆனால், வேலைதான் நடக்கவில்லை.

ஆக, பொது வேலை என்று சொல்லி கம்புக்குக் களை பறிக்கப் போனார்கள். ஏதோ வேலை நடந்தது, கொஞ்சம் பணமும் கிடைத்தது. தம்பிக்குப் பொண்ணும் பார்த்தார்கள்.

இடைத்தரகர்கள் உழைக்காமலேயே பணம் பார்த்தார்கள். பாழானது மக்களின் வரிப்பணம்தான். என்ன கொடுமையடா சாமி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com