ஆரோக்கிய நொறுக்குத்தீனி அவசியம்!

நம் உடல் தேவைகளை பெரிய உணவுகள் மட்டுமே நிறைவு செய்ய முடியாது. அதற்கு இடையிடையே எடுத்துக் கொள்ளும் நொறுக்குத்தீனி (ஸ்நாக்ஸ்) தேவை என்கின்றனர்.
ஆரோக்கிய நொறுக்குத்தீனி அவசியம்!

நம் உடல் தேவைகளை பெரிய உணவுகள் மட்டுமே நிறைவு செய்ய முடியாது. அதற்கு இடையிடையே எடுத்துக் கொள்ளும் நொறுக்குத்தீனி (ஸ்நாக்ஸ்) தேவை என்கின்றனர். குறிப்பாக, படிக்கும் குழந்தைகளிடையே மூளை தனக்குத் தேவையான எரிபொருளான, குளுக்கோசை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்க, நொறுக்குத் தீனி சாப்பிடுவது நல்லது என்கின்றனர் பிரிட்டிஷ் உணவியல் நிபுணர்கள்.

மூன்று பெரிய உணவுகளை சாப்பிடுவதைக் காட்டிலும், இரு உணவுகளுக்கு இடையே, நொறுக்குத் தீனி எடுத்துக் கொண்டு 4 அல்லது 5 வேளையாக சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. உடல் எடை கூடாமல் இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

படிக்கும் குழந்தைகளுக்கு பகல் நேரத்தில்தான் ஆற்றல் தேவை. அதற்கு வேண்டிய கலோரிகளை அவர்கள் பகலில் உண்ணுகிற உணவுகள் தருவதில்லை. இதை ஈடுகட்ட, நொறுக்குத்தீனி உதவுகின்றன. இதனால், மாலை நேர சோர்வையும் தவிர்க்கலாம் என்கின்றனர்.

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் நொறுக்குத்தீனி, சமோசா, சிப்ஸ், சாக்லெட், பீட்சா, பர்கர் என்றில்லாமல், உடனே, சத்தை கொடுக்கும் உணவுகளாக இருக்க வேண்டும். அவற்றில் நார்ச்சத்துள்ள முளை கட்டிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள், முக்கியமாக இருக்க வேண்டும்.

வேக வைத்த உருளைக் கிழங்கு, வாழைப்பழம், கேரட், கோதுமை ரொட்டி, காய்கறிகள், பாதாம், முந்திரி போன்ற கொட்டை உணவுகள் இருந்தால் நல்லது.

முளை கட்டிய தானியங்களில், கோதுமை, கம்பு, சோளம் போன்றவைகளில் புரோட்டீன், தாது உப்புகள், வைட்டமின்கள் கிடைக்கின்றன. முளை கட்டப்பட்ட ஒரு கப் சோயா, 6 கப் ஆரஞ்சு ஜூஸூக்கு சமம்.

சிலர் குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனியாக பாப்கார்ன் தருகிறார்கள். அதற்குப் பதிலாக வேக வைத்த மக்காச்

சோளம் தரலாம். இது நார்ச்சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு இதனால் மலச்சிக்கல் ஏற்படாது; கொலஸ்டிராலையும் சேரவிடாது.

கேரட், பீட்ரூட் துருவல்களைத் தரலாம். கேரட்டில் குழந்தைகள் கற்கும் ஆர்வத்தை தூண்டும் "அசிட்டிவ் கோலைன்' எனும் பொருள் உள்ளது. திராட்சைப் பழங்களையும் கொடுக்கலாம்.

திராட்சையில் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் "ரெஸ்வெரெட் ரோல்' பொருள் உள்ளது.

ஆப்பிள் குழந்தைகளுக்கு ஏற்ற பழம். இதில் "கியூர் செட்டின்' என்ற பைடோ நியுட்டிபன்ட் உள்ளது. இது மூளை செல்களை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

வெள்ளரிக்காயில் இரும்புச் சத்தும், பொட்டாசியமும் அதிகமுள்ளது. இது குழந்தைகள் கணிதப் பாடத்தை ஆர்வமுடன் கற்க உதவுகிறது என்கின்றனர். துத்தநாகசத்து, போலிட் அமிலச் சத்து தரும் நிலக்கடலை,

முந்திரிப் பருப்பு போன்ற பருப்பு வகைகளைக் கூட கொடுக்கலாம்.

எந்த நொறுக்குத்தீனி கொடுப்பதாக இருந்தாலும், அதில் இனிப்பு, உப்பு, கொழுப்பு சத்துகள் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனிப்புத் திண்பண்டங்கள் குழந்தைகளின் பற்களை பாதிக்கின்றன. நார்சத்து அதிகமுள்ள நொறுக்குத்தீனி எடுத்துக் கொண்டால், இடைப்பட்ட நேர பசி உணர்வு தெரியாது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் அதிகம் குடிப்பதும் நல்லது.

குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனி கொடுப்பது என்பது குறிப்பிட்ட நேரத்தில்தான் என்று இருக்க வேண்டும். முற்பகல் 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணி என்று நேர நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். நொறுக்குத்தீனி கொடுப்பது சாப்பாட்டு நேரத்திற்கு நெருக்கமாக இருக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனி சமயத்தில் ஜூஸ் கொடுக்கலாம். மோர் கொடுக்கலாம். இளநீர் கொடுக்கலாம்.

ஆனால், குளிர்பானங்களைத் தருவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், குழந்தைகளின் பற்கள் பாதிக்கப்படு

வதுடன், குழந்தைகளின் உடலில் கலோரியும் எகிறி வேறுபல உபாதைகளை ஏற்படுத்தும்.

குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வில் நொறுக்குத் தீனிக்கு முக்கியப் பங்குண்டு - அது ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக இருந்தால்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com