ஜியாலஜி படித்தால் சிறப்படையலாம்!

ஜியாலஜி என்பது இயற்கை, பூமி, பாறை அமைப்பு, அதன் கலவைகள், பூமியின் வரலாறு, மதிப்பீடு பற்றிக் கற்பதாகும். பூமி அமைப்பில் மண், பாறை முதலியன குறித்த ஆராய்ச்சி,
ஜியாலஜி படித்தால் சிறப்படையலாம்!

ஜியாலஜி என்பது இயற்கை, பூமி, பாறை அமைப்பு, அதன் கலவைகள், பூமியின் வரலாறு, மதிப்பீடு பற்றிக் கற்பதாகும். பூமி அமைப்பில் மண், பாறை முதலியன குறித்த ஆராய்ச்சி, பூமி தன்னுள் பல இரகசியங்களையும் பல்வேறு சிறப்புக்களையும் கொண்டுள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சியால் நாம் பல்வேறு பொருள்களைப் பூமியிலிருந்து பெற முடிகிறது. ஆய்வுகளின் மூலம் புதிய புதிய செய்திகளை மண் பற்றித் தொடர்ந்து அறிந்து கொண்டு வருகிறோம். பூமி பற்றிய ஆழமான ஆய்வே ஜியாலஜி. இதில் ஆராய்ச்சி செய்பவர் ஜியாலஜிஸ்ட். பூமி குறித்து எதிர்காலத்தில் ஆய்வாளராக உருவாக வேண்டுமானால், + 2 படிப்பிற்குப் பின்பு இப்படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்து, தொடர்ந்து முன்னேறி பூமி ஆராய்ச்சி அறிஞராக, ஜியாலஜிஸ்டாக உருவாகலாம்.

பூமி ஆராய்ச்சியாளரின் பணி என்ன?
முழுமையான பூமி அல்லது மண்ணியல் பற்றிய படிப்பு ஜியாலஜி என்பதாகும். பூமியின் இயல்பு, அமைப்பு, அதன் பழக்கம், பூமிக்குள் நடைபெறும் செயல்பாடுகள், மற்றும் இதனுடன் தொடர்புடைய பிற ஆய்வுகளும் இதனுள் அடங்கும். பூமிக்கடியில் உள்ள நீர்வளம், கடலின் செயல்பாடுகள், அலைகளின் இயல்புகள், தாவரங்கள், விலங்குகளின் புதை பொருள்கள் போன்றவை குறித்து ஆராய்வதும் இவ்வகைப் படிப்பாகும்.

ஜியாலஜிஸ்ட் ஆக தகுதிகள்: எஸ்.எஸ்.எல்.சி, + 2-வில் அறிவியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும். இப்படிப்பில் இளநிலை, முதுநிலைப் படிப்புகள் உள்ளன. இளநிலை படிப்பும், அதற்குப் பின்பு முதுநிலைப்படிப்பும் படிக்க விரும்பினால் பி.எஸ்ஸி (ஜியாலஜி) எம்.எஸ்ஸி (ஜியாலஜி),

எம்.பில், பி.எச்.டி படிப்புகள் உள்ளன. மத்திய அரசின் யு.பி.எஸ்.சி ஒவ்வோர் ஆண்டும் ஜியாலிஸ்ட் தேர்வை நடத்தி வருகிறது. இதன் அறிவிக்கை ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் வெளிவருகிறது.

பணி வாய்ப்புகள்: ஜியாலஜி படிப்பை முடித்தவர்களுக்கு இந்திய, வெளிநாடுகளில் பல பணிவாய்ப்புகள் உள்ளன. இந்திய மண்ணியல் அளவை, அரசு சார்ந்த மைனிங், ஹைட்ரோ கார்பன், நிலத்தடி நீர் மையம், எண்ணெய், வாயு நிறுவனங்கள், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் மற்றும் பிற ஆய்வு நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் உள்ளன. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியும் பெறலாம். பத்திரிகையின் சுதந்திர எழுத்தாளர் போன்று இத்துறையிலும் சுதந்திர ஆய்வாளராக இருந்து, பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக,ஆய்வு உதவியாளராகப் பணியாற்றலாம்.

ஊதியம் எவ்வளவு?
ஒரு ஜியாலஜிஸ்ட் தமது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஊதியம் பெற முடியும். பொதுவாக எம்.எஸ்ஸி பட்டம் பெற்றவர், வருடத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் வரை ஊதியமாகப் பெற முடியும். சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவோர் ரூ.35000 முதல் ரூ.50000 வரை மாத ஊதியமாகப் பெற முடியும். இருப்பினும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிவாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் மாதம் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் டாலர் வரை ஊதியமாகப் பெறமுடியும்.

இந்தியாவிலுள்ள புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்கள்: இந்தியாவில் புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்கள் ஜியாலஜி படிப்பிற்காக உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் அலிகார், வாரணாசி, கர்நாடகத்தில் பெங்களூரு, மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா, பீகாரில் தான்பாத் மற்றும் புதுதில்லியில் அமைந்துள்ள நிறுவனங்கள் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றவையாகும். இந்நிறுவனங்களில் இடம் கிடைத்துச் சேர்ந்து படித்தாலே ஜியாலஜிஸ்டாக உருவாக முடியும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com